இலங்கையில் பல்வேறு தரைத்தோற்ற அமைப்பு நிலவுவதால் பல இயற்கை முதல்கள் காணப்படுகின்றன.
இவை பல்வேறு தேவைகளுக்கும் பயன்படுகின்றன.
இலங்கையில் கிடைக்கும் இயற்கை முதல்களாவன
கற்கள்,
இரத்தினக்கற்கள்,
களிமண்,
படிகம்,
இல்மனைற்று.
என இன்னும் பல இயற்கை வளங்கள் கிடைக்கின்றன.
இவை பற்றி தனித்தனியே கற்போம் :-
சுண்ணாம்புக் கல்
சுண்ணாம்புக் கல் கல்சியம்காபனோற்றைக் கொண்ட பாறை வகையாகும்.
இது இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் வௌ;வேறு வடிவில் காணப்படுகின்றன.
பலாங்கொடை மாத்தளை கண்டி போன்ற இடங்களில் தொலமைற் வடிவிலும், இலங்கையின் வடபகுதியில் மயோசின் சுண்ணாம்புக் கல்லாகவும், அம்பலாங்கொட, காலி, அம்பாந்தோட்டை போன்ற பகுதிகளில் முருகைக்கல்லாகவும், குன்கமா எனும் இடத்தில், ஓட்டுச்சிப்பிப் படிவுகளிலும் சுண்ணாம்புக் கல் உள்ளது.
சுண்ணாம்புக் கல் பல கைத்தொழில்களுக்கு மூலப்பொருளாகப் பயன்படுகின்றன :-
சிமெந்து உற்பத்தி
கண்ணாடிக் கைத்தொழில்
நீறாத சுண்ணாம்பு உற்பத்தி
கட்டடநிர்மாணம்
வெளிற்றும் தூள் உற்பத்தி எனப் பல முறைகளில் பயன்படுகின்றது..
நீறாத சுண்ணாம்பு உற்பத்தி
நீறாத சுண்ணாம்பு கல்சியங் காபனேற்றில் இருந்து உற்பத்தி செய்யப்படுகின்றது.
சுண்ணாம்புக் கல்லை சூழைகளில் இட்டு சுடுவதன் மூலம் நீறாதசுண்ணாம்பு பெறப்படும்.(ஏறத்தாள 825பாகை செல்சியஸ்)
இலங்கை முறையில் சூழைகள் செங்கல்லால் கட்டப்பட்டு களியினால் பூசப்பட்டிருக்கும்.
இதன் விட்டம் பொதுவாக 3 மீற்றர் கொண்டதாகவும், உயரம் 2.5 மீற்றர் கொண்டதாகவும் காணப்படும்.
அடியில் விறகு அடுக்கப்படும் அதன்மேல் சுண்ணாம்புக் கல் இடப்படும் இவ்வாறு மாறிமாறி அடுக்கப்பட்டு அடியில் உள்ள விறகு தீமூட்டப்படும்.
விறகு எரிந்து முடிந்தபின் சிலநாட்களுக்கு சூழை குளிரவிடப்படும். பின்னர், நீறாத சுண்ணாம்பு எடுக்கப்படும்.
முதலில் களிமண் தூசுக்கள் அகற்றப்படும் பின்னர் அது குறித்தபங்கு சுண்ணாம்புக்கல்லுடன் சேர்த்து நன்கு அரைக்கப்படும்.
அரைத்துப் பெறப்படும் கலவை குறித்த பாகையில் சுழலும் உருளையின் மேலிருந்து கீழ் நோக்கிக்கொட்டப்பட கீழிருந்து நெருப்பினால் கலவை நன்கு சுடப்படும்.
இவ்வாறு சுடப்பட்டுப் பெறப்படும் கலவை கிளிங்கர் எனப்படும்.
இது நீருடன் சேர்த்துக் கலக்கப்படும் போது விரைவில் இறுகிவிடும். இதைக்கட்டுப்படுத்துவதற்கு கிளிஙற்கரானது, ஜிப்சம் எனப்படும் (நீர்சேர் கல்சியம் சல்போற்) பதார்த்தத்துடன் சேர்த்து மீண்டும் அரைக்கப்படும்.
இதுவே சீமெந்து எனப்படும்.
இச்சீமெந்து OPC அதாவது சாதாரண போட்லட் சீமெந்து என்பது இதன் கருத்தாகும்.
போட்லன் என்பது இங்கிலாந்தில் உள்ள ஒருஇடமாகும். அங்குள்ள கற்கள் வலிமையானவை, இதுபோல சீமெந்தும் வலிமை என்ற கருத்திற்கமைவாக OPC எனப்படுகின்றது.