அணுக்களும் அணுக்கட்டமைப்பும்
- சடப்பொருட்களின் அடிப்படை ஆக்கஅலகு அணுவாகும். அணுக்கள் மிகவும் சிறியவை வெற்றுக்கண்ணுக்குத் தென்படமுடியாதவை.
- அணு எனும் சொல் டிமோக்கிறட்டிஸ் என்பவரால் அறிமுகஞ் செய்யப்பட்டது.
- அணுக்களில் பலசிறிய துணிக்ககைகள் காணப்படினும் 3 அடிப்படைத் துணிக்கைகள் முக்கியமானவை.
1. இலத்திரன்கள்,
2. புரோத்திரன்கள்,
3. நியூத்திரன்கள்,
- இலத்திரன்கள் மறை ஏற்றம் கொண்ட மிக்சிறிய துணிக்கை, இவை அணுக்களில் வெளிப்புறமாகக் காணப்படும்.
- நியூத்திரன்களும் , புரோத்தன்களும் கருவில் காணப்படும் துணிக்கைகளாகும்.
- அணு ஒன்றின் இயல்பு மற்றை மூலகத்தின் அணுவில் இருந்து வேறுபடுவதற்குக் காரணம் அணுவெண் வேறுபாடாகும்.
- அணுவெண் என்பது 'அணுவில் உள்ள புரோத்தன்களின் எண்ணிக்கை, இலத்திரன்களின் எண்ணிக்கை' ஆகும்.
- திணிவெண் என்பது அணுவின் கருவில் உள்ள துணிக்கைகளான நியூத்திரன்,புரோத்திரன்களின் மொத்தக்கூட்டுத் தொகையாகும்.
மேலதிக தகவல்களுக்கு