ஒளித்தொகுப்பு

 1. தாவரங்கள் தமது உணவைத் தாமே தயாரிக்கக் கூடியவை.

 2. அவை பச்சையைவுருமணிகளைக் கொண்டு சூரிய ஒளியின் முன்னிலையில் எளிய தொடக்குப்பொருட்களில் இருந்து சிக்கலான உணவைத் தயாரிக்கும் செயற்பாடு ஒளித்தொகுப்பாகும்.

 3. ஒளித்தொகுப்பின் ஆரம்பத் தொடக்குப்பொருள் காபனீரொட்சைட்டும், நீருமாகும். பிரதான விளைபொருள் குளுக்கோசு, பக்கவிளைபொருள் ஒட்சிசன் ஆகும்.

 4. சூரிய ஒளி ஒளித்தொகுப்பிற்குத் தேவையான சக்தியை வழங்கும், பச்சையம் அச்சக்தியை உறுஞ்சி ஒளித்தொகுப்பை நடாத்தும்.

 5. ஒளித்தொகுப்பின் சமன்பாடு பின்வருமாறு ஆமையும்

ஒளித்தெகுப்பிற்கு இலைகள் கொண்டுள்ள சிறப்புக்கள் :-
1. பச்சையம் கொண்டுள்ளன.
2. அகன்று தட்டையானவை.
3. ஏராளமான இலைவாய்களைக் கொண்டவை.
4. இலை ஒழுங்கு முறையில் காணப்படும்.


ஓளித்தொகுப்பின் முக்கியத்துவம்

 • விலங்குகளுக்குத் தேவையான உணவு கிடைக்கும். அதாவது உணவு

  மூலம் சக்தி கிடைக்கும்.

 • பல்வேறு செயற்பாடுகள் மூலம் வெளிவரும் CO2 சூழலில் இருந்து அகற்றப்பட உதவுகிறது.

 • விலங்குகள் சுவாசிக்கத்தேவையான ஒட்சிசன் வெளியிடப்படும்.

 • உணவுச்சங்கிலியின் ஆரம்ப அங்கியாக அமைவதால் உணவுச்சங்கிலி நிலைத்திருக்க உதவும்.

 • ஓளிச்சக்தி இரசாயன சக்தியாக மாற்றப்படுகிறது.