கலங்களும் இழையங்களும்

 • அங்கிகளின் தொழிற்பாட்டினதும் கட்டடைப்பினதும் அடிப்படை ஆக்க அலகு கலமாகும்.
 • கலங்கள் மிகவும் சிறியவை.
 • வெற்றுக் கண்ணுக்கு பெரும்பாலானவை தென்படுவதில்லை.
 • இலங்களை முதன்முதலில் அவதானித்தவர் றொபட் கூக் ஆவார்.
 • இவர் தக்கைக் கலங்களை அவதானித்தார்.
 • செல்டனும் சுவானும் கலக்கொள்ளையை வெளியிட்டார்கள்.
 • 'உயிருள்ள அங்கிககள் யாவும் கலங்களால் ஆக்கப்பட்டவை' என்பது கலக்கொள்கையின் பிரதான அம்சமாகும்.
மேலதிக தகவல்களுக்கு

அடிப்படை இலத்திரனியல்

 • பதார்த்தங்கள் கடத்திகள், காவலிகள், குறைகடத்திகள் எனப் பிரிக்கப்படும்.
 • குறைகடத்திகள் எனப்படுபவை கடத்திகளுக்கும் காவலிகளுக்கும் இடைப்பட்ட நிலையில மின்னைக் கடத்தும்.

இலத்திரனியில் பற்றி பாடத்தினுள் பிரவேசிக்க இங்கே அழுத்துக.

அணுக்களும் அணுக்கட்டமைப்பும்

 • சடப்பொருட்களின் அடிப்படை ஆக்கஅலகு அணுவாகும். அணுக்கள் மிகவும் சிறியவை வெற்றுக்கண்ணுக்குத் தென்படமுடியாதவை.
 • அணு எனும் சொல் டிமோக்கிறட்டிஸ் என்பவரால் அறிமுகஞ் செய்யப்பட்டது.
 • அணுக்களில் பலசிறிய துணிக்ககைகள் காணப்படினும் 3 அடிப்படைத் துணிக்கைகள் முக்கியமானவை.
  1. இலத்திரன்கள்,
  2. புரோத்திரன்கள்,
  3. நியூத்திரன்கள்,

 • இலத்திரன்கள் மறை ஏற்றம் கொண்ட மிக்சிறிய துணிக்கை, இவை அணுக்களில் வெளிப்புறமாகக் காணப்படும்.
 • நியூத்திரன்களும் , புரோத்தன்களும் கருவில் காணப்படும் துணிக்கைகளாகும்.
 • அணு ஒன்றின் இயல்பு மற்றை மூலகத்தின் அணுவில் இருந்து வேறுபடுவதற்குக் காரணம் அணுவெண் வேறுபாடாகும்.
 • அணுவெண் என்பது 'அணுவில் உள்ள புரோத்தன்களின் எண்ணிக்கை, இலத்திரன்களின் எண்ணிக்கை' ஆகும்.
 • திணிவெண் என்பது அணுவின் கருவில் உள்ள துணிக்கைகளான நியூத்திரன்,புரோத்திரன்களின் மொத்தக்கூட்டுத் தொகையாகும்.
மேலதிக தகவல்களுக்கு

ஒளித்தொகுப்பு

 1. தாவரங்கள் தமது உணவைத் தாமே தயாரிக்கக் கூடியவை.

 2. அவை பச்சையைவுருமணிகளைக் கொண்டு சூரிய ஒளியின் முன்னிலையில் எளிய தொடக்குப்பொருட்களில் இருந்து சிக்கலான உணவைத் தயாரிக்கும் செயற்பாடு ஒளித்தொகுப்பாகும்.

 3. ஒளித்தொகுப்பின் ஆரம்பத் தொடக்குப்பொருள் காபனீரொட்சைட்டும், நீருமாகும். பிரதான விளைபொருள் குளுக்கோசு, பக்கவிளைபொருள் ஒட்சிசன் ஆகும்.

 4. சூரிய ஒளி ஒளித்தொகுப்பிற்குத் தேவையான சக்தியை வழங்கும், பச்சையம் அச்சக்தியை உறுஞ்சி ஒளித்தொகுப்பை நடாத்தும்.

 5. ஒளித்தொகுப்பின் சமன்பாடு பின்வருமாறு ஆமையும்

ஒளித்தெகுப்பிற்கு இலைகள் கொண்டுள்ள சிறப்புக்கள் :-
1. பச்சையம் கொண்டுள்ளன.
2. அகன்று தட்டையானவை.
3. ஏராளமான இலைவாய்களைக் கொண்டவை.
4. இலை ஒழுங்கு முறையில் காணப்படும்.


ஓளித்தொகுப்பின் முக்கியத்துவம்

 • விலங்குகளுக்குத் தேவையான உணவு கிடைக்கும். அதாவது உணவு

  மூலம் சக்தி கிடைக்கும்.

 • பல்வேறு செயற்பாடுகள் மூலம் வெளிவரும் CO2 சூழலில் இருந்து அகற்றப்பட உதவுகிறது.

 • விலங்குகள் சுவாசிக்கத்தேவையான ஒட்சிசன் வெளியிடப்படும்.

 • உணவுச்சங்கிலியின் ஆரம்ப அங்கியாக அமைவதால் உணவுச்சங்கிலி நிலைத்திருக்க உதவும்.

 • ஓளிச்சக்தி இரசாயன சக்தியாக மாற்றப்படுகிறது.

My wish

I am a Teacher, I am Teaching Science and IT in secondary level. I like to publish science and IT notes and question in Tamil medium.
I hope this is a useful matter to not only student but also Teachers.
You can get notes and question papers, It is totally Free.

Yours,
A.R. Emil,
Teacher,
T/Nilaveli Tamil M.V.
Trincomalee,
Sri Lanka.